மகா சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?

01 March 2022

இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழாவானது இன்று இரவு கொண்டாடப்பட உள்ளது.மகா சிவராத்திரி, இந்த சொல்லிற்கு சிவ பெருமானுக்கான சிறந்த இரவு என்ற பொருளும் இருக்கிறது.

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த சிவாராத்திரி தினத்தை பக்தர்கள் அனைவரும் புனித நாளாக கொண்டாடுகின்றனர். இதனால் மகா சிவராத்திரி நாளானாது முக்கியத்துவம் பெறுகிறது.சிவ பக்தர்களால் கொண்டாடப்படும் இந்த மகா சிவராத்திரி தினமானது, வருடந்தோரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி, சதுர்தசி திதியானது மார்ச் 1ம் தேதி காலை 3 மணிக்கு துவங்கி மார்ச் 2 காலை 1 மணியோடு முடிகிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் இரவு முழுவதும் வழிபாடு செய்கின்றனர்.வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த நாளில் சிவ பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்து அருகில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். அப்போது "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை உச்சரித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கின்றனர்.இந்து கடவுளான சிவபெருமான் முதன்முதலாக சிவராத்திரி அன்றுதான் தோன்றினார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.