விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

15 October 2022

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற  வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் சென்னை அப்பல்லோவை சார்ந்த சிறப்பு வாய்ந்த மருத்துவ குழுவினர்களுடன் அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த  இலவச மருத்துவ முகாமில் விழுப்புரம் மாவட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், விழுப்புரம் நகராட்சி ஆணையர், வழக்கறிஞர்கள் பொதுமக்கள், மற்ற அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என சுமார் 1800 மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமை விழுப்புரம் மாவட்ட சட்டப்பணி ஆனைக் குழுவின் செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியுமான  விஜயகுமார் மேற்பார்வையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் ராஜ்குமார் , நிர்வாக உதவியாளர்கள்  சீதாலட்சுமி, புவனேஸ்வரி , அலுவலக உதவியாளர்கள்  ராமலிங்கம்,செல்வராஜ் தன்னார்வத் தொண்டு உறுப்பினர்கள் சூர்யமூர்த்தி, அனுசா ஆகியோர் செய்திருந்தனர்.

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் மற்றும் துணை ஆசிரியர்