வாணியம்பாடி பாலாற்றில் ஆபத்தை உணராமல் சிறார்கள் ஆற்றில் குளித்துக் கொண்டு வருகின்றனர்

18 October 2021

வாணியம்பாடி பாலாற்றில் ஆபத்தை உணராமல் சிறார்கள் ஆற்றில் குளித்து வருவதால் உயிர் பலியாகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.*

வாணியம்பாடி அக் 18: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பி உள்ளது. இதன் உபரி நீர் 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் திரண்டு விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகமான நீர் பாலாற்றில் சென்றுகொண்டிருக்கிறது. இதனை காண வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். 

இந்த நிலையில் குழந்தைகள் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குளித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் மணல் கொள்ளையர்களால் அதிக அளவு மணல் எடுத்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் நீர் நிரம்பி உள்ளதால் குழந்தைகள் ஆற்று நீரில் குளித்து வருகின்றனர். இதனால் உயிர் பலியாகும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் ஆற்றில் குழந்தைகள் குளிப்பது தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிருபர்: ஆம்பூர் அ.ராஜா