உள்ளாடை அணியாமல் இருந்தால்... இவ்வளவு நன்மையா?

30 December 2021

காற்று, தண்ணீர், உணவு எப்படி முக்கியமோ அது போலத்தான் பலருக்கும் உள்ளாடைகளும். உள்ளாடை அணியாமல் ஆடை மட்டும் அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியே வரக் கூட தயங்குவார்கள்.

உள்ளாடை அணியாமல் இருக்கலாம் என்று கூறுவதைக் கூட பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் உள்ளாடை அணிபவர்களைக் காட்டிலும் அணியாதவர்களுக்கு பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைகிறதாம். உள்ளாடைகளை இறுக்கமாக அணியும் போது அங்கு வியர்வை, ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அந்த சூழல் கிருமிகள் வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதன் காரணமாக பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படுதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.வியர்வை காரணமாக பிறப்பு உறுப்பு மற்றும் மறைவான பகுதிகளில் கிருமிகள் பெருக்கம் ஏற்பட்டு வியர்வை துர்நாற்றம் ஏற்படுகிறது. உள்ளாடை அணியவில்லை என்றால் இப்படி துர்நாற்றம் வீசுதற்கான வாய்ப்பு குறைகிறது. உள்ளாடை அணியாத போது வியர்வை வேகமாக ஆவியாகிறது. துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. ஈரப்பதத்துடன் இருப்பதால் ஏற்படக் கூடிய தொற்று அபாயம் குறைகிறது.உள்ளாடை அணியாமல் இருப்பது மனதளவில் அளெசகரியத்தை அளிக்கலாம். ஆனால், உடல் அளவில் அது சௌகரியத்தையே அளிக்கிறது. உள்ளாடை அணியாமல் இருப்பது தொடக்கத்தில் கடினமாகத் தெரியலாம்... ஆனால் ஒரு சில வாரங்களிலேயே அதுதான் செளரியமானது என்ற உணர்வு ஏற்படுமாம்.ஆண்களுக்கு இது விந்தணு உற்பத்தி அதிகரிக்கத் துணை செய்கிறது. ஆண்களுக்கு விதைப்பை உடலுக்கு வெளியே உள்ளது. உடல் வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலையில் இருந்தால்தான் விந்தணுக்கள் உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காகத்தான் இயற்கையாகவே இந்த ஏற்பாடு. நம்முடைய உடலின் வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட். விதைப்பையின் வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் இருக்கும்.உள்ளாடை அணியும் போது விதைப்பை உடலுடன் மேலே சேர்த்து இழுக்கப்படுகிறது. இதன் காரணமாக அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். தொடர்ந்து இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும்.