குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் இன்று

15 October 2021

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொயொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியான அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். தனது பதவிக்காலத்துக்குப் பின்னர், மாணவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த அவர், ஷில்லாங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், 250 கிலோ நாட்டு உப்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உருவப் படத்தை வரைந்து அசத்தினர்.