உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்

04 January 2023

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் வடுகபாளையம் கிராமத்தில் நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதில் பட்டாதாரர் பெயர் தவறுதலாக உள்ளதை திருத்தம் செய்து பட்டா வழங்கிட கோரி 18.11. 2022 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, ஒரு வார காலத்திற்குள் பட்டாவை சரி செய்து வழங்குவதாக எழுத்து பூர்வமான உடன்பாட்டை காற்றில் பறக்கவிட்ட தாசில்தாரை கண்டித்தும் கூத்தனூர், பல்லவாடி, கொம்மாசமுத்திரம் ஆகிய கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தட்டுமொட்டு சாமான்கள், குண்டான் சட்டிகளுடன் இன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஒன்றிய செயலாளர் ரகுராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் 
டி.எம்.ஜெய்சங்கர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, பச்சையப்பன், செல்வராஜ், பாண்டியன், மலர், அஞ்சலை, கல்வராயன், சேதுபதி மற்றும் வடுகபாளையம், கூத்தனூர், பல்லவாடி, நரிப்பாளையம், அத்திப்பாக்கம், தானம், காட்டுச்செல்லூர், காட்டுஎடையார், எறையூர், வடகுரும்பூர், புகைப்பட்டி, பழங்குணம், கல்சிறு நாகலூர், செட்டியந்தல், செம்பியன்மாதேவி, 
ஏ.புத்தூர், எலவனாசூர்கோட்டை, பூ.மலையனூர், 
எஸ்.மாலையனூர், பரமேஸ்வரிமங்கலம், சிக்காடு ஆகிய கிராம பொதுமக்களும் திரளாக ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தில் குடி ஏற முயன்ற போது உளுந்தூர்பேட்டை போலீசார் தடுப்புவேலி அமைத்து அவர்களை வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினர் பின்பு போராட்டக்காரர்கள் வட்டாட்சியர் வந்து பதில் அளிக்கும் வரையில் அங்கிருந்து செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ராஜ் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்