சங்கராபுரம் திருக்குறள் பேரவை சார்பில் 22-ஆம் ஆண்டு திருவள்ளுவர் விழா...

18 January 2023

சங்கராபுரம் திருக்குறள் பேரவை சார்பில் 22-ஆம் ஆண்டு திருவள்ளுவர் விழா...

சங்கராபுரம் ஜன-18

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை சார்பில் 22 ஆம் ஆண்டு திருவள்ளுவர் விழா சங்கராபுரம் கடைவீதியில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆவின் கூட்டுறவு சங்க சேர்மன் நா.ஆறுமுகம் விழாவை தொடங்கி வைத்தார், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி தாகபிள்ளை திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார், திருக்குறள்ஒப்புவித்தல் போட்டியில் பங்கு பெற்றமாணவர்களுக்கு ஆண்டவர் அரிசி ஆலை ஹாஜி எஸ்.எம். சுலைமான் பரிசுகளை வழங்கினார், திரைப்பட பாடலாசிரியர் வரலாற்று ஆய்வாளர் பாவலர் அறிவுமதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அரசம்பட்டு, திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் ராஜன் கண்கட்டி வித்தையை செய்து காட்டினார், நிகழ்ச்சியினை  கல்லை  தமிழ் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச்செம்மல் செ.வ.மதிவாணன், இளம் இசை தென்றல் செள.அரிகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் நிகழ்ச்சியில்
தமிழ்ச்சங்க நிர்வாகிகள்,  சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக 
கலந்துகொண்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்