ஊரடங்கில் சில சிக்கல்கள்!

23 May 2021



தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியில் அமர்ந்த பிறகு வரப்போகிற முழு ஊரடங்கு நாளை முதல் அமலாகிறது. அரசு சார்பில் வெளிவந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் சில குழப்பங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கேள்விகளை முன்வைக்கிறார்கள்.


1. திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் தொடர்பாக அறிவிப்பு இடம்பெறவில்லை. மே24 - ஜூன் 1க்குள் பல இடங்களில் நிச்சியக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு எவ்வாறு செல்ல முடியும்.

2. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் எப்படி தமிழகம் முழுவதும் தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகம் செய்ய முடியும் ?

3. மளிகை கடைகள் மூடப்பட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களாலும் தங்களுக்கு தேவையானதை ஒரே நேரத்தில் வாங்கி விட முடியுமா ?

4. தமிழகத்தில் பெரும்பாலும் பால் விற்பனை சிறிய மளிகை கடைகள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது ( அனைத்து இடங்களிலும் அரசு பால் விற்பனை கூடங்கள் இல்லை). பால் அதிகம் தேவைப்படும் குழந்தைகள் , முதியவர்கள் உள்ள குடும்பங்களால் எப்படி சமாளிக்க முடியும் ?

இவ்வாறான கேள்விகளுக்கு இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பிருக்கிறது.