ராஜபாளையம் சிறு குறு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகி பயன்பெற வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா அறிவுறுத்தல்

09 June 2021

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிறு குறு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகி பயன்பெற வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா அறிவுறுத்தல்


ராஜபாளையம் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு தமிழக அரசு சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணுயிர் பாசனம் அமைக்க விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்
சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொரு துளி நீரும் விவசாயத்திற்கு இன்றியமையாதது, குறைந்த அளவு நீரைக்கொண்டு அதிக பரப்பு சாகுபடி செய்ய நுண்ணீர் பாசனமே சிறந்த ஒரு தீர்வாகும். நுண்ணீர் பாசனத்தின் கீழ் மழைத்தூவான், தெளிப்பான் மற்றும் சொட்டு நீர் பாசனம் ஆகியவை அடங்கும். தென்னை ,கரும்பு பருத்தி ,மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும் பயறுவகைப் பயிர்களுக்கு தெளிப்பான் அல்லது மழைத்தூவான் கொண்டு நீர் பாசனம் செய்யலாம். இதில் சொட்டுநீர் பாசனம் அமைத்து நீர் பாசனம் செய்யும் போது குறைந்த நீர் தேவைப்படுவது மட்டுமில்லாமல் சொட்டுநீர் பாசன நீரில் உரங்களை கரைத்து இடுவதால் உரச் செலவும் குறைகிறது, மேலும் அந்த நிலங்களில் களைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இராஜபாளையம் வட்டாரத்திற்கு 333 ஹெக்டேர் இலக்கு வரப்பெற்றுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உடனடியாக தங்களது பட்டா, அடங்கல் ,ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சிறு குறு விவசாயி சான்றிதழ், மண் மற்றும் நீர் மண் ஆய்வு முடிவுகள் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அவர்களை அணுகி பயன்பெற வேளாண்மை உதவி இயக்குனர் திரு சுப்பையா அவர்கள் கேட்டுக் கொள்கிறார்