பொள்ளாச்சியில் தடை செய்யபட்ட குட்கா பறிமுதல்

01 November 2022

பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட 11 கிலோ புகையிலை பொருட்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். 
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அழகம்மாள் என்ற மூதாட்டியின் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கு இருந்த வியாபாரிகளை அழைத்து காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் பேசுகையில் 
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்பவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி