எழுச்சி தமிழருக்கு கறுப்புக்கொடி காண்பித்ததைக் கண்டித்து சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டம்.

27 October 2020

தஞ்சாவூர் பிராமணர்களின் வேத நூலில் பெண்களை இழிவுபடுத்தப்பட்டிருப்பதைக் கூறி பெரியார் அமைப்பின் கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தகுந்த உதாரணங்களுடன் கூறியிருந்த நிலையில் அவர் சொன்ன கருத்துக்கு எதிரான பார்ப்பனீய அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பொது நிகழ்விற்க்கு இன்று ஈரோடு சென்ற திருமாவளவனுக்கு கறுப்புக்கொடி காட்டிய நிகழ்வைக் கண்டித்து தஞ்சை மையமாவட்டம் மாரியம்மன் கோயில் முகாம் சார்பில் மாரியம்மன் கோவில் ஆர்ச் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலர் வழக்கறிஞர் தங்க சுரேந்திரன், ஆவண காப்பமைய மாவட்ட செயலர் ரகு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் கறுப்புக்கொடி காட்டிய நபர்கள் மீது உரிய காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் எழுச்சி தமிழருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஜனநாயக கருத்துக்களைக் கூற ஜனநாயக உரிமை வழங்கிடவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்பது. முகாம் பொறுப்பாளர்கள், சங்கர், விக்னேஷ், ராஜா, பாரதி, நவீன் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை செயலர் பொன்.ம கண்ணன் உள்ளிட்ட 50 க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.