மணிமுத்தா அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு திறந்து வைத்தார்...

04 November 2022

மணிமுத்தா அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு திறந்து வைத்தார்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அணைக்கரை கோட்டாலம் ஊராட்சியில் உள்ள மணிமுக்தா அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகளின் நலன் கருதி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு,
மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் 
த.உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ. மணிக்கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு விவசாய பாசனத்திற்கான தண்ணீரை திறந்து விட்டனர், இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் சுமார் 5,493 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும்
என்பது குறிப்பிடத்தக்கது.. 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் மற்றும் சப்எடிட்டர்