எஸ்.ஜே.சூர்யா வருமான வரி வழக்கை எதிர்கொள்ள ஆணை

28 May 2022

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் சமீபத்தில் நடித்திருந்த மாநாடு திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டது. அத்துடன் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


அத்துடன் சில படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார். இவர் வருமான வரியை உரிய முறையில் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக வருமான வரித்துறை பல முறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும், பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இது தொடர்பான வழக்குகள் எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்யக்கோரிய எஸ்.ஜே. சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் , வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.