மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

20 July 2021


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாணவர் ஜோனிஸ்ராஜ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவரின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினார். இதேபோல், 11ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற தனக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி ராஜஸ்ரீ திகல்யா என்ற மாணவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.