மெஸ்ஸி vs லெவன்டோவ்ஸ்கி

30 November 2022

லியோனல் மெஸ்ஸியை அவரது ஆதரவாளர்கள் கால்பந்து ராஜா என்கிறார்கள். ஒரு சிலர் மாரடோனாவின் பெயரைக் கொண்டு கால்பந்துக் கடவுள் என்றுகூட அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் மாரடோனாவின் பெயரைப் பெற அவருக்கு இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் ஃபிபா உலகக் கோப்பை. அதைப் பெறுவதற்கு பெரும் தடையாக இருக்கப் போகிறவர் போலாந்து அணியின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இருவருக்கும் ஒரு வயதுதான் வேறுபாடு. மெஸ்ஸிக்கு 35 வயது. போலாந்து முன்கள வீரருக்கு 34 வயதாகிறது. லெவன்டோவ்ஸ்கியின் தாக்குதல் ஆட்டமும் பந்தைக் கடத்திச் செல்லும் திறனும் மெஸ்ஸியின் அணிக்கு கடும் சவாலாக இருக்கப் போகின்றன என்ற கணிக்கப்படுகிறது.5-ஆவது முறையாக கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் மெஸ்ஸி, சாதாரண வீரராகவும் அணியின் தலைவராகவும் கோப்பையை வெல்வதற்கு இதுவரை முயன்றிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணீருடன் களத்தைவிட்டு வெளியேறுவதுதான் வாடிக்கையாக இருந்திருக்கிறது. இது அவருக்கு கடைசி வாய்ப்பு.போலாந்து அணியின் தலைவரான லெவன்டோவ்ஸ்கிக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை போட்டி. அவர் மிக வயதான வீரராக அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடக் கூடும். கிளப் போட்டிகளிலும் சர்வதேசப் போட்டிகளிலும் பிரபலமான வீரர் இவர்.