நோயின்றி வாழ என்ன செய்யலாம்...? சில முக்கிய வழிமுறைகள் இதோ...!!

04 December 2021

"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்", நாம் ஆரோக்கியமாக வாழ வழிமுறைகள் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம். தினமும் அதிகாலை சுமார் 3:45 மணியளவில் நம் உடலின் ஆக்சிஜன் அதிகரிக்கும். அப்போது நம் நுரையீரல் நன்றாக இயங்கும். அந்த நேரத்தில், பிராணாயமம் செய்வது மிகவும் நல்லது. மேலும், யோகாசனம் தெரிந்தவர்கள் 3:45 முதல் 5:00 மணிக்குள் செய்ய வேண்டும். அதற்கு பின் 5:00 முதல் 7:00 மணி வரை பெருங்குடல் சீராக இயங்கும்.அந்த சமயத்தில் அதிகப்படியான காற்று பெருங்குடலுக்குள் செல்லும். எனவே, அப்போது, மலம் கழிக்க வேண்டும். அதற்கு பின், 7:00 முதல் 9:00 மணிக்குள் நம் காலை உணவை சாப்பிட்டு விட வேண்டும்.

ஏனெனில் இரவு நீண்ட நேரம் நாம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், நம் வயிற்றில் அல்சர் உருவாகும்.

எனவே. காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்துவிட வேண்டும். அப்போது, நம் வாயில் இருக்கும் ஒரு வகையான திரவம் வயிற்றுக்குள் சென்று அல்சரை கட்டுப்படுத்துகிறது. அதன்பின்பு, குளித்துவிட்டு, 9:00 மணிக்கு முன் கட்டாயமாக காலை உணவை சாப்பிடவிட வேண்டும்.இந்த நேரத்தில், சாப்பிட்டால் தான், 9:00 மணியிலிருந்து 11:00 மணிக்குள் நம் உடலில் இருக்கும் மண்ணீரல், நாம் சாப்பிட்ட உணவை ரத்த வெள்ளையணுக்களாக உற்பத்தி செய்கிறது. இது, ஹீமோகுளோபினை சீராக்க உதவுகிறது. அதன்பின்பு, மதியம் 1:00 மணி இதயத்திற்கான நேரம். இதயம், கழிவுகளை வெளியேற்றும். அந்த நேரத்தில் நாம் அதிகமாக தண்ணீரை குடித்து, மன அழுத்தமின்றி இருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் சிலர் தண்ணீர் குடிக்காமல், நீண்ட தூரம் பயணித்து அலுவலகம் செல்வார்கள். அங்கு, வேலை பளு காரணமாக கோபமாகவோ, பயத்திலோ இருப்பவர்கள் தான் அதிகமாக மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். எனவே, காலை 11:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரை இதயத்தை சரியாக கவனித்து கொள்ள வேண்டும்.அதாவது, அதிக அளவு தண்ணீர் குடிப்பதோடு, கோபப்படாமல் இருப்பது மிக முக்கியம். அதன்பின்பு, மதிய உணவு 1:00 மணி முதல் 2:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். ஏனெனில், 2:00 முதல் 3:00 மணி வரை, நம் உடலின் சிறு குடல், நம் உணவை இரத்தம் மற்றும் எலும்புகளுக்கு பிரித்து அனுப்புகிறது.அடுத்தது, 3:00 மணி முதல் 5:00 மணி வரை சிறுநீரகம், நாம் சாப்பிட்ட உணவுகளின் கழிவுகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில், நாம் அதிக தண்ணீர் பருக வேண்டும். மேலும், 3:00 முதல் 5:00 மணிக்குள் 20 அல்லது 30 நிமிடங்கள் வரை தூங்கிக்கொள்ளலாம். அதன்பிறகு, மாலை 5:00 முதல் 7:00 மணி வரை சிறுநீரகம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்.