சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் த. வா. க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நேரில் ஆஜர்

07 October 2021

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் த. வா. க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நேரில் ஆஜர்

உளுந்தூர்பேட்டையில் கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு அதிக வரி வசூல் செய்யப்படுவதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  அப்போது சுங்கச்சாவடி அடித்து
நொறுக்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் த. வா. க. தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ், நகர செயலாளர் முரளி உள்ளிட்ட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.  இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது,  இந்த விசாரணையின்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தற்போது பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் உள்ளிட்ட 14 பேர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள். 

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சிமாவட்டம்