தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பு

07 October 2021



சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரவீன் குமாருக்கு,  தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பு..... ஆயிரக்கணக்கானோர் உடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க களைகட்டிய இறுதி நாள் பிரச்சாரம்..


தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் 35 இடங்களுக்கு  இடைத்தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இன்று மாலையுடன் பிரச்சாரம் இந்த நிலையில்,  சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பிரவீன்குமார் என்பவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.  தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், நாள்தோறும் காலை முதல் மாலை வரை சேலத்தாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரவீன் குமாருக்கு ஆதரவாக தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன்,  அதிமுக மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஏவி ராஜு மெடிகல் ராஜா ஆகியோர் அதிமுக வேட்பாளரை  ஆதரித்து சேலத்தாம்பட்டி கோவில் பகுதியில் இருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடன் வீதி வீதியாக நடந்தே சென்று ஹவுசிங் போர்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சிறப்பு அழைப்பாளர்கள்,  இந்த தொகுதியில்  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தம்பி பிரவீன் குமாரை வெற்றிபெறச் செய்தால்  ஊராட்சி பகுதி மக்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்வார் என்றும் எனவே சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரவீன் குமாருக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இறுதி நாள் பிரச்சாரம் என்பதால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட  ஆயிரக்கணக்கானோர் உடன் இசை வாத்தியங்கள் முழங்க அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டது சேலத்தாம்பட்டி ஊராட்சி பகுதியில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள எஞ்சிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.