நரிக்குறவர் சமூக மக்களுக்கு 20 குடியிருப்புகளை உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்...

02 January 2023

நரிக்குறவர் சமூக மக்களுக்கு 20 குடியிருப்புகளை உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா நகரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பின்னர் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது தற்போது தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் உட்பட அனைத்து பகுதிகளும் விரிசல்கள் ஏற்பட்டு சிதிலம் அடைந்து இடிந்து விழும் சூழலில் இவர்கள் குழந்தைகள், முதியோர், பெண்கள், பேருந்து நிலையம், பள்ளிக்கூட கட்டிடம் போன்ற இடங்களில் வசித்து வரும் சூழ்நிலையில் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்தனர் இதை அடுத்து நரிக்குறவர் மக்களின் நிலையை அறிந்து 20 குடும்பங்களுக்கு உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தனது சொந்த செலவில் 20 வீடுகளை அமைத்து தகர மேற்கூரைகளை அமைத்து இந்த குடியிருப்புகளை முன்னாள் முதல்வர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ரிப்பன் வெட்டி குற்றி விளக்கு ஏற்றி திறந்து வைத்து அவர்களின் வாழ்வாதார முன்னற்றத்திற்காக ரூபாய் 10,000 மதிப்பிலான வியாபார பொருட்கள் வழங்கப்பட்டது, முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் நரிக்குறவர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் இரா. குமரகுரு ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஆர். செண்பகவேல், மணிராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ் மற்றும் அதிமுக தொண்டர்கள் நரிக்குறவர் சமூக மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் உள்ள சில அரசியல்வாதிகள் நரிக்குறவர் இன மக்களின் வீட்டுமனையை ஏமாற்றி கிரயம் வாங்கிக் கொண்டதை அரசு மீட்டு தர வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை வவைத்துள்ளனர்....

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்