வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாதா..? காரணம்?

06 September 2021



கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும்.

உடல் எடை குறைப்பது தொடங்கி இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் வரையிலான உணவுப்பட்டியலில் கிரீன் டீயும் இடம் பெறுகிறது. அதோடு பால், டீ, காஃபி குடிக்கும் பழக்கம் மாறி கிரீன் டீ குடிப்பதுதான் வழக்கம் என சொல்லும் நிலைக்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர்.

கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயம் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். ஏன் தெரியுமா..?கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும்.

இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். அல்சர் போன்ற நோய்கள் கொண்டவர்கள் கிரீன் டீயை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கவே கூடாது என பரிந்துரைக்கின்றனர்.


அதோடு வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடும் ஆபத்து உண்டாகும். எனவே குரீன் டீயுடன் ஏதாவதொரு உணவும் சாப்பிட வேண்டும் என்கின்றனர்.
இல்லையெனில் இரத்தம் கெட்டியாக இறுகி இரத்தக் குழாய் அடைப்பு உண்டாகும். இரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் வெறும் வயிற்றி கிரீன் டீ குடிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

\1\6புளித்த தயிரில் இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? வகை வகையாக சமைக்க டிப்ஸ்...
அதோடு கிரீன் டீ உடலின் ஆற்றலை இழக்க வைக்கிறது. இரும்புச்சத்தையும் உறிஞ்சிவிடுகிறது.

அனிமியா உள்ளவர்களும் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. இதய பாதிப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

ஏனெனில் கிரீன் டீயில் உள்ள கஃபைன் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோனை உருவாக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கும்
இது இதயக் கோளாறு கொண்டவர்களுக்கு முற்றிலும் நல்லதல்ல. எனவே காலை எழுந்ததும் வெறும் கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தை விடுத்து அதோடு ஏதேனும் உணவையும் சப்பிடுவது நல்லது.

உதாரணத்திற்கு ஊற வைத்த தானிய வகைகள், பழங்களின் சாலட், பிஸ்கெட் இப்படி ஏதாவதொன்றை சாப்பிட்டு பின் கிரீன் டீ குடிக்கலாம்.