ஜீரண சக்தி, எடை குறைப்பு… வெங்காயம் நன்மைகள்; பயன்படுத்துவது எப்படி?

30 March 2021

குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த வெங்காயம் பல நன்மைகளை தருகிறது.

குளிர் காலத்தில் உங்களது உடல் வெப்பநிலை இழப்பது வழக்கமான ஒன்று. அப்போது நீங்கள் வெப்பநிலை சீராக வைப்பதற்கு நவநாகரீக ஜாக்கெட் அல்லது கோட் ஆகியவற்றை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால் நமது உடல்நிலை வெப்பத்தை இழப்பதன் மூலம்  உடல் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகள சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால்  இந்த பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க உங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம். இதனால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க  பல்வேறு காரணிகளைப் பயன்படுத்துவோம். அதில் பெரும்பாலானவை ஊட்டச்சத்துடன் தொடர்புடைய காரணிகளாக இருக்கும்.

அந்த வகையில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும், வெங்காயம் ஒரு உண்மையான ஊட்டச்சத்து காரணியாக உள்ளது. பெரும்பாலும் அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் முக்கியமாக சேர்க்கப்படுகிறது. இதனால் வெங்காயம் ஊட்டச்சத்து பொருட்களில் முதன்மையானதாக உள்ளது.  இந்த வெங்காயத்தை நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல. இது நமக்கு எந்த வகையில் ஆரோக்கிய நன்மை தருகிறது என்பதே முக்கியம்.

வெங்காயம் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இயற்கையாகவே, குளிர்காலம், இருமல், காதுகள் அரிப்பு, காய்ச்சல் மற்றும் சில தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதால் வெங்காயம் குளிர்காலத்தில் சிறந்தவைர்யாக உள்ளது.

வெங்காயம் உட்கொள்வது பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. 2008 மற்றும் 2014 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, புவேர்ட்டோ ரிக்கோவில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் மீது, ஒன்றுக்கு மேற்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டு ‘சோஃப்ரிடோ’ சாப்பிட்டவர்கள்  லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் பிரபலமான ஒரு சாஸ் கொடுத்து ஆய்வு செய்தபோது, இதில், 67 சதவீதம் மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து குறைவு என தெரியவந்துள்ளது.