குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 'டான்': எஸ்.ஜே. சூர்யா

14 May 2022

டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனும் அதிகாலை காட்சியில் ரசிகர்களின் வரவேற்பைக் காண சென்னையில் நிறைய திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார்.முதல் நாளில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே வந்தன. இந்த நிலையில், டான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இன்று (சனிக்கிழமை) காலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுகள் குவிகின்றன.