கர்நாடகத்தில் புதிதாக 6,976 பேருக்கு கொரோனா உறுதி

08 April 2021

 கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 25 ஆயிரத்து 390 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 6,976 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,794 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது. 353 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.