கோவை ஸ்கோடா நிறுவனத்தின் புதிய அறிமுகமாக குஷாக் மாடல் கார் அறிமுக விழா !

23 July 2021

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய அறிமுகமாக  குஷாக் மாடல் கார் அறிமுக விழா கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள  எஸ்.ஜி.ஏ.கார்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது… 


பிரிமியம் கார் வகைகளில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஸகோடா தனது புதிய அறிமுகமாக குஷாக் எனும் புதிய வகை பிரிமியம் காரை அறிமுகம் செய்துள்ளது…
சுமார் .10.49  லட்சம் ஆரம்ப விலையாக உள்ள இந்த கார்,  ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் என மூன்று வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளது.இந்நிலையில் கோவையில் ஸகோடா  குஷாக்  மாடல் அறிமுக விழா சவுரிபாளையம் பகுதியில் உள்ள எஸ்.ஜி.ஏ.கார்ஸ் இந்தியா  நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் எஸ்.ஜி.ஏ.கார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அற்புதராஜ் ,மற்றும்  இயக்குனர்கள் செல்வராஜ் , மரியா பிரகாஷ்,ஞானம் செல்வராஜ்,அகிலா அற்புதராஜ்,சைனி பார்பரா ஆகியோர் கலந்து கொண்டு குஷாக் மாடல் காரை அறிமுகம் செய்தனர்.குஷாக் மாடல் கார் கார் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதால் எதிர்பார்த்ததை விட முன்பதிவுகள் அதிகமாகி உள்ளதாகவும்,குறிப்பாக  கிளைமேட் கண்ட்ரோல் வசதி, வை-பை, வயர்லெஸ் சார்ஜர், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, பாதுகாப்பான பயணத்துக்கு உதவும் 6 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்.,  ரியர் பார்க்கிங் கேமரா, இரவு நேரத்தில் தானாக செயல்படும் முகப்பு விளக்கு , பிரேக்கிங் சிஸ்டம்,என பாதுகாப்பு அம்சங்களிலும் தனித்துவமிக்க மாடலாக குஷாக் இருப்பதாக எஸ்.ஜி.ஏ.கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார்.விழாவில் முன்னதாக விழாவிற்கு வந்திருந்த எஸ்.ஜி.ஏ.கார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..


கோவை ஜான்