தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு-2022

28 November 2022

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு-2022

தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பரிமாற்று குழுமம் இந்திய அரசின் அறிவியல் வளர்ச்சித் துறை நடத்தும் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2022 முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவியல் மாநாடு 28 11 2022 இன்று காலை உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் மா அன்புமணி அறிவியல் மனப்பான்மை உறுதிமொழி கூறி துவக்கி வைத்தார் என் சி எஸ் சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்நாதன் கருத்துறை வழங்கினார் அறிவியல் இயக்க கருத்தாளர் சே முருகன் ஓரிகாமி செயல்பாடுகளை விளக்கினார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீ ராமச்சந்திரன் மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் மணியன் எம் கே சுப்பிரமணியன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த அறிவியல் மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 102-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் 51க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்து, ஆய்வறிக்கைகளின் செயல்முறை விளக்கங்களையும் அளித்தனர்கள், இந்த ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கான குழுவினர் பிரவீன் சாபு உதவி பேராசிரியர் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருத்தாசலம், ஆறுமுகம் முதல்வர் அருள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலி, முனைவர் எம். சுப்பிரமணியன் உதவி பேராசிரியர் ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளுந்தூர்பேட்டை, முனைவர் ஏ.சபரிதாசன் உதவி பேராசிரியர் ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளுந்தூர்பேட்டை, 
எம்.கௌரி உதவி பேராசிரியை ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி பாலி இவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ மோகன்ராம் அறிமுகம் செய்து வைத்தார் 

இதில் தேர்வு செய்யப்பட்ட 7  ஆய்வறிக்கைகளை வழங்கிய மாணவ மாணவியர்களுக்கு
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல்ராஜ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் என்.ரமேஷ் பாபு ஆகியோர்
பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்

இந்த அறிவியல் மாநாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஒய் கருணாகரன் ஒருங்கிணைத்தார் மற்றும் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் அய்யனார் ராமகிருஷ்ணன் சீனிவாசன் குமரவேல் செல்வ முருகன் முருகன் மாவட்ட செயற்குழு ஜெயலட்சுமி என் சி எஸ் சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ராமச்சந்திரன் ராஜவேல் அந்தோணிசாமி பாத்திமா சரவணன் மற்றும் 30க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் 
மாவட்ட செய்தியாளர்/ சப்எடிட்டர்