சர்வீசுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி கார் சேதம் அடைந்தது: கார் உரிமையாளருக்கு ரூ.8¼ லட்சம் இழப்பீடு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

01 December 2022

சர்வீசுக்குவிட்டபோதுவிபத்தில்சிக்கிகார்சேதம்அடைந்ததைஅடுத்துகாரின்உரிமையாளருக்கு ரூ.8¼ லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.சேலம்நுகர்வோர் கோர்ட்டு சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் சேலத்தில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ரூ.8 லட்சத்திற்கு கார் வாங்கினார். ஒரு ஆண்டுக்கு பிறகு சம்பந்தப்பட்ட கம்பெனியில், காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்தார். இதையடுத்து கம்பெனி ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து ஓட்டினார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதம் அடைந்தது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சவுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். அதில் சேவை குறைபாட்டால் சேதம் அடைந்த காரை பெற்றுக்கொண்டு வேறு அதே மாடல் காரை தனக்கு வழங்க வேண்டும் அல்லது காரின் விலையான ரூ.8 லட்சத்து 2 ஆயிரத்து 477-யை வட்டியுடன் சோ்த்து தர வேண்டும் என்று கார் கம்பெனிக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ரூ.8¼ லட்சம் இழப்பீடு  இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சேதம் அடைந்த காரை சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகம் எடுத்துக்கொண்டு சவுந்தர்ராஜனுக்கு வழக்கு செலவு தொகை ரூ.1 லட்சம் உள்பட மொத்தம் ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 285-ஐ 2 மாதங்களில் வழங்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 2019-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பு கூறினர்.