கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய பள்ளி ஆசிரியை அதிரடி கைது

04 January 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய பள்ளி ஆசிரியை அதிரடி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசெல்வி(43) க/பெ இசையாஸ் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த அமலாமேரி க/பெ அலெக்ஸ்சாம்சன் மற்றும் அவர் உறவினர்களிடம் ஏலச்சீட்டு கட்டி முடித்துள்ள நிலையில், தனக்கு தரவேண்டிய ரூபாய் 38,66,650/- பணத்தை தராமல் ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பகலவன் இ.கா.ப அவர்களிடம் புகார் அளித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பரமணியன் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் விசாரணை செய்தார். அப்போது ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றியதுடன் பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்கும் போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்விடுத்துள்ளது தெரியவரவே,  தலைமறைவாக இருந்த அமலாமேரி க/பெ அலெக்ஸ்சாம்சன் மற்றும் அண்ணாதுரை (எ) குழந்தைராஜ் த/பெ லுர்துசாமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கபட்டது. இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்ற இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்

கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் /சப்எடிட்டர்