கள்ளக்குறிச்சியில் பழங்குடி ஆதியன் சமூக மக்களின் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

05 November 2022

கள்ளக்குறிச்சியில் பழங்குடி ஆதியன் சமூக மக்களின் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது


பழங்குடி ஆதியன் (எஸ். டி) பூம்பூம் மாட்டுக்காரர்கள் சமூக மக்களின் கோரிக்கைகளான:
வீட்டுமனை" சாதிச்சான்று உள்ளிட்டவைகளோடு இச்சமூக மக்கள் மீது போடப்பட்ட 
கந்துவட்டி" கட்டப்பஞ்சாயத்து என பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரி 
200 கணக்கான மக்களோடு திரண்டு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் மா.வெங்கடேசன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது!

இதில் கொட்டும் மழையில் தன் மக்களுக்கான நியாயத்தைக் கோரி பழங்குடி ஆதியன் சமூகத்தை சேர்ந்த
கண்ணம்மாவின் கண்ணீர் மல்கும் அறைக்கூவல் கேட்பவர் நெஞ்சை உலுக்கியது!
இதுவரைக்கும் எங்க சமூகத்துல ஒரு போலீஸ் ஸ்டேஷன் நின்னது இல்ல!
"ஒரு குழந்தை பெத்துக்க ஆசுபத்திரி போனதில்ல! குழந்தையை பெத்துக்க அப்படியே பிரசவ வலி வந்தாலும் நாங்க மரத்தடியில் புள்ளைய பெத்துகிட்டு மரத்தடியே தங்கிடுவோம் நாங்க!"
பள்ளிக்கூடம் 'சாவடி 'சத்திரம் 'என்று காலம் தள்ளிட்டு கிடக்கிறோம் நாங்க ஊருக்குள்ள போயிட்டு ஒரு படி ரெண்டு படி அரிசி வாங்கிட்டு வந்து எங்க மக்களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுப்போம்!
போலீசு ஸ்டேசன் எப்படி இருக்கும்னு அறிஞ்சதில்லை அய்யா!
ஒரு மாட்டை கண்ணு பிடிச்சு ஓட்டி வந்து புள்ளைய காப்பாத்த போயிட்டு எங்க பிள்ளைகளை புளிய மரத்தடியில் உட்கார வைத்துவிட்டு ஊருக்குள்ள போவோம்!
எங்களுக்கு ஊரு இல்ல வீடு இல்ல வாசல் இல்ல எல்லாம் இல்ல! படிக்கிறது பெரிசு படிக்கிற பசங்க என்ன பண்ணுவாங்க அவங்க 
மேல கேசு!
எங்கேயோ பள்ளிக்கூடத்துல படிக்கப் போயிட்டு சாயங்காலம் ஆனா நாங்க தங்கற புளியமரத்தடிய இடத்துக்கு வருவாங்க!
இப்பதான் பத்து வருஷமா புள்ளைங்க படிக்க ஆரம்பிக்கிறாங்க அதுக்கு முன்ன படிப்பு கிடையாது சின்ன சின்ன புள்ளைங்க கையில ஒரு சுரை குடுவை கையில 
போடுவோம். வாங்கடா ஊரப்பாக்கம் போய் சோறு வாங்கி பிழைக்கலாம்" என்று போவோமய்யா! 
புள்ளைங்க எல்லாம் கூட்டிட்டு ஊரப்பக்கம் போகுறப்ப அந்த புள்ளைங்க "அக்கா சோறு போடு! எம்மா சோறு போடு தாயே! 
பசி எடுக்குதம்மானு "
மழையில சோறு ஆக்க முடியாது புள்ளிய தூக்கி இக்கல்ல வச்சுக்கிட்டு ஊர் ஊரா பிச்சை எடுத்து பிள்ளைகளை காப்பாத்தறோம்!
எங்க சமூகத்துல ஒரு பொண்ண கேட்டாலும் எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் நாங்க பத்து பேர் கூடி பேசிக்குவோம் சண்டை போட்டுக்குவோம் அப்புறம் நாங்களே கூடிக்குவோம் இதுக்காக 
போலீசு ஸ்டேசனு போனதில்ல!
எங்க மக்க பொழைக்கணும்' எங்க சமுதாயத்திலும் படிக்கணும் சட்டத்துல நீங்க காப்பாத்தி தீர்ப்பு சொல்லனும் அய்யா!
யாரோ ஒருத்தர் பேச்சைக் கேட்டு நாதியில்லாத எங்கள எப்படி வேண்டுமானாலும் ஸ்டேசனுல தள்ளலாம் எஃப் ஐ ஆர் போடலாம்னு செய்யறாங்க. எங்க வீட்டு ஆம்பளைங்கள உள்ள புடிச்சு போட்டா இல்ல எங்க ஆம்பளைங்க போசுக்கு பயந்து ஓடிட்டா ......
"பொட்டச்சி நாங்க வயசு புள்ளைங்கள வச்சுக்கிட்டு மரத்தடியில் தனியா படுத்து கிடக்கிறோம்....
எங்க கிட்ட யாரு வந்து படுப்பானே தெரியாத பயத்துல கெடக்கறோம்"
என தங்கள் மக்களின் அவல நிலையை நாடோடி வாழ்க்கை முறையை எடுத்துக் கூறி கேளாத அரசுக்கு ஓங்கி ஒலிக்க .....
"கொட்டும் மழையிலும் தட்டு தடுமாறும் வயதிலும் கண்ணம்மாவின் அறைக்கூவல் கேட்பவரின் நெஞ்சத்தை 
உறைய வைத்தது........‌‌

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த அறைக்கூவலுக்கு  
ஆணை பிறப்பிக்க வேண்டும்!
இந்த அடித்தட்டு 
மக்களுக்கான வீட்டுமனை''
சாதி சான்று, ஜோடிப்பு பொய் வழக்கிலிருந்து விடுவித்தல்... உள்ளிட்டவளை அரசு தனி கவனத்தில் கொண்டு இவர்கள் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் மனித நேயத்தோடு பாதுகாத்திட வேண்டுமென..........
மனு கொடுக்கும் போராட்டத்தில்!
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் 
மாவட்ட செயலாளர் மா.வெங்கடேசன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட அமைப்பு செயலாளர் 
சுப்பிரமணியன், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர்
இரா.கஜேந்திரன்,
இளைஞர் அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜய்,
திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ரவி,
ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன்,
சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ்,
ஒன்றிய குழு தோழர் ராமன், மாநில பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டர் கலந்துகொண்டனர்.....
நிறைவாக கூட்டத்தில் வருகை தந்த மக்களோடு  கட்சி நிர்வாகிகள் சென்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுக்கப்பட்டது...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் மற்றும் சப் எடிட்டர்