மாவு மில் வைத்து மசாலாக்களை சொந்தமாக தயாரித்து வரும் கோவையை சேர்ந்த பயோடெக் பட்டதாரி இளைஞர்

29 November 2021

நகரத்தில் ஒரு கிராமிய சுவை என மாவு மில் வைத்து மசாலாக்களை  சொந்தமாக தயாரித்து வரும் கோவையை சேர்ந்த பயோடெக் பட்டதாரி இளைஞர்

கோவையை சேர்ந்தவர் கார்த்திக்.கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பயோடக் பட்டதாரியான இவர் இளம் தொழில் முனைவோராக  தனது சொந்த முயற்சியில்,பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாய்வீரா எனும் மாவு மில் வைத்து அதில்,தனது சொந்த தயாரிப்பாக மல்லி,மிளகாய்,சாம்பார்,சிக்கன் மற்றும் கறி மசாலா போன்ற பொடிகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.பல முன்னனி பிராண்டுகளின் மசாலா பொருட்கள் சந்தையில் இருந்தாலும், தனது பாட்டியின் பழைய கிராமிய சமையல் ஆலோசணைபடி,நகரத்தில் ஒரு கிராமிய சுவை எனும் இவரது மசாலாக்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில்,தனது பயோடெக் கல்லூரி படிப்பை முடித்து,பகுதி நேரமாக டியூசன் சென்டரையும் நடத்தி வரும் கார்த்திக்,உணவு பொருட்கள் தயாரிப்பில் உள்ள ஆர்வத்தால் தாம் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார்.தமது சொந்த ஊர் தஞ்சாவூரை அடுத்த விவசாய கிராமமாக இருப்பதால்,தனது தோட்டத்தில் விளையும் பொருட்களை கொண்டு தரமான மசாலாக்களை வழங்குவதாக கூறினார்..கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லாமல் பெற்றோர்களுக்கு பாரமாக எவ்வளவோ இளைஞர்கள் வாழ்வை சீரழித்து கொண்டிருக்கும் நிலையில்,மாவு மில் வைத்து இளம் தொழில் முனைவோராக வளர்ந்து வரும் கார்த்திக் தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளார்…