குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.

09 March 2021

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவச மாக கொடுக்கப்படும் என்றும் மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்து அ.தி.மு.க. தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் வரைவு தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வரைவு தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வழங்கியதாக கூறப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துகள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் பல்வேறு திட்டங்கள் மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும்.

அதில் மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்ப தலைவியிடம் வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் விரைவில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.