பல்லவ நாடு பெயர் வரக் காரணம் என்ன பல்லவர்கள் யார் ?

பல்லவ நாடு பெயர் வரக் காரணம் என்ன பல்லவர்கள் யார் ?

தன் தாயின் நினைவாக ஒரு நாட்டிற்கே பெயர் சூட்டினார் அதுதான் பல்லவ நாடு.

பல்லவர் நாட்டை தோற்றுவித்தவர் இளந்திரையன் தொண்டைமான் ஆவார்.

தன் தாயான பீலிவளை பிறந்த மணிபல்லவத் தீவு ஞாபகமாக பல்லவ நாடு என்று பெயர் சூட்டினான்.

தான் ஸ்தாபித்த நாட்டிற்கு பல்லவ நாடு என்று பெயர் சூட்டினார் இளந்திரையன் தொண்டைமான், அதிலிருந்து அவன் தாய்க்குக் கொடுத்த மரியாதையை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம் .

முன்னொரு காலத்தில் கரிகால சோழனின் மகன் கிள்ளிவளவன் தொண்டைமான் யாத்திரைக்காக இலங்கை செல்லும்போது மணிபல்லவத் தீவில் தங்குகிறான் .

அப்பொழுது அந்தத் தீவை ஆண்டுவந்த நாகர் குல மன்னனின் மகளான இளவரசியை காதலிக்கிறான் கிள்ளிவளவன் தொண்டைமான்.

கருவுற்ற தன் மனைவிக்கு தன் குழந்தைக்கு ஒரு நாடு கொடுப்பேன் என்று உத்தரவாதம் கொடுத்து யாத்திரையைத் தொடங்கினார் கிள்ளிவளவன்.

பின்னாளில் தான் கொடுத்த வாக்குப்படி காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு சோழன் தன் மகனுக்கு ஒரு நாட்டை கொடுக்கிறார்.

அந்த நாட்டிற்கு சோழனின் மகனான தொண்டைமான் இளந்திரையன் தன் தாய் பிறந்த மணிபல்லவத் தீவு நினைவாக பல்லவ நாடு என்று  பெயர் சூட்டுகிறான்.

இவர்களின் முன்னோர்கள் சோழர்களே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அதன்பின் இந்த நாட்டில் வந்தவர்கள்தான் பல்லவர்கள் .

(ஆதாரம் இளந்திரையன் முன்பாகவே பாடிய பெரும்பாணாற்றுப்படை நூல்)

- மழவராயர், தஞ்சை