மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்...
20 November 2025
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்...
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மேலும் நெடுந்தூரம் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் அடிக்கடி நான்கு வழி சாலைகளில் விபத்துகள் ஏற்படுகிறது விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் உயிர் காக்கும் முயற்சி அளிக்கும் வகையில் அடுக்கு மாடி கட்டிடங்கள் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்க்காக்கும் உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது அதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என வழியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மாலை உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுமார் மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர் கொற்றவை நியூஸ்