உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.18- கோடியாக உயர்வு

05 April 2021

 உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,18,97,800 -ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 65 ஆயிரத்து 517-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 708- ஆக உள்ளது.  

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன. ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக அளவில் தற்போது இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.