உலகக்கோப்பைக்காண செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இரண்டாவது ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ் ஜெர்மனியின் பிடரெரிச் ஸ்வனேவிடம் மோதினார். இந்த ஆட்டத்தில் 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷ் தோல்வியடைந்தார். மேலும் இந்திய வீரர்களான அர்ஜூன் எரிகைசி, பிரக்யானந்தா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.