முதல்முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் கேப்வெர்டே அணி

15 October 2025

23 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. கனடா மெக்ஸிகோ அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்க உள்ள இந்த போட்டிகளில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன . மேலும் இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கான தகுதி சுற்றில் கேப்வெர்டே அணி எஸ்வதினியை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கேப்வெர்டே அணி முதல் முறையாக உலகப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.