வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 22 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதற்கு ஈடாக இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தேர்தல் கூட்டம் நடைபெற உள்ளது இதன் காரணத்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. எனவே இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.