வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!
07 December 2025
விழுப்புரம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!
விக்கிரவாண்டி அடுத்த எம். குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி மனைவி சித்ரா (54) கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், 5ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.