குளிர்கால ஆரோக்கியம்: எளிய மருத்துவக் குறிப்புகள்
05 January 2026
குளிர் காலத்தில் வைரஸ் தொற்றுகள் எளிதில் பரவும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.
குறிப்பாக இஞ்சி, பூண்டு. இவை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலை வெப்பமாக வைத்திருக்க உதவும்.
மஞ்சள் பால்
இரவில் மிதமான சூட்டில் மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால் குடிப்பது தொண்டை தொற்றுக்குச் சிறந்த மருந்தாகும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
தாகம் எடுக்காது என்பதால் பலர் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். இது உடலை வறட்சி அடையச் செய்யும்.
உடல் உறுப்புகள் சீராக இயங்க தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் மிதமான சுடுதண்ணீர் குடிப்பது நல்லது.