நாம் அனைவரும் நன்கு அறிந்த மார்க்கெட்டில் சுலபமாக கிடைக்கக்கூடிய வெள்ளை பூசணிக்காயின் பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெள்ளை பூசணிக்காயை துருவி உப்பு சேர்த்து இஞ்சி பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை கடுகு தாளித்து தயிரில் கலந்து தயிர் பச்சடியாக சாப்பிட்டால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அளவுக்கு ருசியாக இருக்கும்.
இந்த வெள்ளை பூசணிக்காய் ரத்த கொதிப்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். அதுமட்டுமின்றி வெள்ளை பூசணிக்காய் தலை சுற்றலை கட்டுப்படுத்தும். இந்த வெள்ளை பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். பூசணிக்காயை அடிக்கடி நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் வெண் பூசணி சாற்றை குடித்து வந்தால் நல்ல பலனை தரும்....