மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று 28 வயது இளம்பெண் ஒருவர் இரவு 9 மணி அளவில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது அந்த காரில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த நபர் இருந்துள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றி சென்றுள்ளார். அந்தக் காரின் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து மூன்று பேரும் அந்த பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மைதான் பகுதியில் காரை நிறுத்தி அந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் மூவரும் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவாக உள்ள மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்...