மா மதுரையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

07 December 2025

மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி விமானம் மூலம் மதுரை  விமான நிலையத்திற்கு இரவு 7:15 மணிக்கு வந்தடைந்தார்..நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் (07.12.2025) திருமணம், அரசு நலத்திட்ட உதவிகள், மற்றும் கே.கே.நகர் பால்பண்ணை அருகே புதிய பாலம் திறப்பு  ஆகிய நிகழ்வில் கலந்து கொள்கிறார்.. கொட்டும் மழையிலும் . அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட நிர்வாகம், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர் .