வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவோ புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகின்ற 27ஆம் தேதி புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற 27ஆம் தேதி கடலோரப் பகுதிகளான சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.