வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து ஏற்கனவே புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது வலுவில் இருந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 950 km தொலைவிலும் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 960 கிலோமீட்டர் தொலைவிலும் காக்கிநாடாவிற்கு 970 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த தாழ்வு மண்டலம் மேலும் நகர்ந்து இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது இதனைத் தொடர்ந்து நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஆனது செவ்வாய்க்கிழமை மேலும் வலுவடைய கூடும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.