 
	 
								தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நேற்று நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுப்பெற்று மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிர புயலாக 28ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரத்தில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சமயத்தில் காற்றின் வேகம் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும் எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.