குடிதண்ணீர் வராமல் அவதிபடும் கிராம மக்கள்
23 October 2025
குடிதண்ணீர் வராமல் அவதிபடும் கிராம மக்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வீரணாமூர் கிராமத்தில் மூன்று நாட்களாக குடிதண்ணீர் வராமல் பொது மக்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் .
மழைநீரையே நேரடியாக பிடித்து குடித்து வரும் சூழலில் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரிவர மின்சாரம் இல்லை, மின் மோட்டார் பழுது என அலட்சியமாக பதிலளிப்பதாக கூறி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்