கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் ! தவிப்பில் மக்கள் !
13 October 2025
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமம் மோளையன் வட்டத்தில் உள்ள கைபம்பு கடந்த மூன்று மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர் , இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர்ரிடம் பலமுறை பொதுமக்கள் கூறியுள்ளனர் அதை ஊராட்சி மன்ற தலைவரோ கண்டு கொள்ளவில்லை இதனால் 12/10/2025 அன்று காலை 8 மணி அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.