கூடுதல் உபரிநீர் திறப்பு

22 October 2025

கூடுதல் உபரிநீர் திறப்பு



சாத்தனூர் அணையில் தற்போது (அக்-22 மாலை 5 ) நீர் மட்டம் 113.45 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 7000 மற்றும் வெளியேற்றம் வினாடிக்கு 5000 கன அடியாகவும் உள்ளது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் தற்போது நீர் வெளியேற்றம் வினாடிக்கு 9000 கன அடி வரை திறக்கப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

-செய்தியாளர்.
ஆ.ஆகாஷ்,விழுப்புரம்