வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
18 November 2025
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் பாராளுமன்றத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது தமிழக வெற்றி கழகம் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு படுத்துவதை இப்படி சரியானதாக இருக்கும்? அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அரசு ஊழியர்களை திமுக அரசு திசை திருப்பி மடைமாற்றி சிறப்பு வாக்கு திருத்த பணிக்கு எதிரான போராட்டமாக மாற்ற மிரட்டி பணிய வைத்துள்ளது. தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியேறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர் அதனை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. இதையும் முறையாக செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை காவல்துறை கையில் வைத்திருக்கும் முதல்வர் காவல்துறை முறையாக இயக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் துன்புறுத்தல். மின்கட்டணத்தை மாத ஒருமுறை பதில் சொல்லிப்போம் என்பதில் கோட்டை விட்டுள்ளனர். தமிழகத்தில் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். முதலமைச்சர் தொகுதி கொளத்தூர் தொகுதிகள் 9000 வாக்குகள் அதிகமாக சேர்த்து வைத்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். பேட்டியின்போது, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கொற்றவை செய்தியாளர்
S.முகேஷ் குமார்
ஓட்டப்பிடாரம்