விருதுநகர் K.V.S மேல்நிலை பள்ளியில் கடந்த நவம்பர் 7ம் அன்று பள்ளியின் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.நடந்து முடிந்த 2025 ம் ஆண்டுக்கான 10 ம் வகுப்பிற்கான மாநில பொது தேர்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் K.V.S மேல்நிலை பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் மதன்.ச என்ற மாணவர் கணிதத்தில் 100, ஆங்கிலத்தில் 99, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 4 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்தார். தங்கபதக்கங்களை விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் உயர் திரு. கண்ணன் IPS வழங்கி பாராட்டினார்.