விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியன் சார்பாக, பொறியாளர்களின் பதிவு ஒரு இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறும் மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்தித்தர கோரியும், பொறியாளர்களின் பதிவு ஒரு முறை பதிவு செய்தால் ஆயுட்காலம் வரை செல்லத்தக்கதாகவும் மேலும் பதிவினை புதுப்பித்தல் அவசியமில்லை என்ற நடைமுறையை, நடைமுறைப்படுத்தி தரக் கோரியும் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில் பொறியாளர்கள் வரைபடம் தயார் செய்யவும் கையெழுத்து செய்யவும், நடைமுறையை மாற்றாமல் மேலும் பொறியாளர்களுக்கு ஓடிபி வரவேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தென் மண்டல தலைவர் கண்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.